திருப்பூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பின்னலாடைகள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருப்பூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பின்னலாடைகள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருப்பூர்
திருப்பூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பின்னலாடைகள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பின்னலாடைகளை அனுப்பும் பணி தீவிரம்
திருப்பூரில் இருந்து தினமும் பல கோடி ரூபாய்க்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுபோல் உள்நாட்டு வர்த்தகமும் நடந்து வருகிறது. இந்நிலையில் திருப்பூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பின்னலாடைகள் லாரிகளில் அனுப்பிவைக்கப்படுகிறது. இதுபோல் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதியில் இருந்து விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் சரக்குகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால், ஆடை தயாரிப்பாளர்கள் பலரும் வெளிமாநிலங்களுக்கு ஆடைகளை ரெயில்கள் மூலம் அனுப்பும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
ரெயில் நிலையத்தில் குவியும் பண்டல்கள்
இதன் காரணமாக வெளிமாநில ஒவ்வொரு பகுதிகளுக்கும் பின்னலாடைகள் பண்டல்கள் மூலம் அனுப்பப்படுகிறது. திருப்பூர் ரெயில் நிலையத்தில் தற்போது பனியன் பண்டல்கள் குவிந்து வருகின்றன. இதுபோல் பலரும் ஆடைகளை ரெயில் புக்கிங் செய்து வருகிறார்கள்.
விரைவில் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு ஆடைகளை சேர்த்து விட்டால், எந்த பிரச்சினையும் இன்றி அதற்கான தொகை கிடைக்கும். இதற்கிடையே போக்குவரத்திற்கு தடை விதிப்பு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் ஆடைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும். நஷ்டமும் ஏற்படும் என்பதால் தொழில்துறையினர் பலரும் விரைவாக ஆடைகளை அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.