தடுப்பூசி செலுத்த திரண்ட பொதுமக்கள்

தடுப்பூசி செலுத்த திரண்ட பொதுமக்கள்;

Update: 2021-04-30 16:12 GMT
கோவை

கோவை அரசு கலைக் கல்லூரி மையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் திரண்டனர்.

அரசு கலைக்கல்லூரிக்கு மாற்றம்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி மையம் செயல் பட்டு வந்தது. இன்று (சனிக்கிழமை) முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்க ளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 

எனவே அரசு ஆஸ்பத்திக்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா பரவல் தடுக்க, அங்கிருந்த தடுப்பூசி மையம் கோவை அரசு கலைக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. அது நேற்று முதல் செயல்பட தொடங்கியது.

எனவே அங்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் திரண்டு  வந்தனர். அவர்கள் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர். ஆனால் சமூக இடைவெளியை கடைபிடிக்கா மல் திரண்டு நின்றனர்.

முண்டியடித்த பொதுமக்கள்

அப்போது, அங்கிருந்தவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட் டது. அதை வாங்குவதற்கு பொதுமக்கள் முண்டியடித்தபடி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் அரசு ஆஸ்பத்திரி நிர்வாக அதிகாரிகள், ரேஸ்கோர்ஸ் போலீசார் கோவை அரசு கலைக் கல்லூரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கூடி நின்ற பொதுமக்களை சமூக இடைவெளி விட்டு வரிசையில் நிற்கச் சொல்லி அறிவுறுத்தினர்.

400 பேருக்கு தடுப்பூசி

இதையடுத்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளி விட்டு நின்று தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். 

நேற்று ஒரே நாளில் கோவை அரசு கலைக் கல்லூரி கொரோனா தடுப்பூசி மையத்தில் 200 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி, 200 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி என மொத்தம் 400 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்