ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீசாரின் குழந்தைகளுக்கு ரூ.2½ லட்சம் கல்வி உதவித்தொகை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீசாரின் குழந்தைகளுக்கு ரூ.2½ லட்சம் கல்வி உதவித்தொகை
ராணிப்பேட்டை
தமிழக காவல் துறையில் பணிபுரிந்து வரும் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவரவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2019 -20-ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களிடம் இருந்து பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டது.
அதில் 18 பேர் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மொத்தம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் வழங்கினார்.