வாணியம்பாடியில் கணவன் இறந்த சிறிது நேரத்தில் மனைவியும் சாவு

கணவர் இறந்த சிறிது நேரத்தில் மனைவியும் இறந்த சம்பவம் வாணியம்பாடியில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

Update: 2021-04-30 14:07 GMT
வாணியம்பாடி

கணவன் சாவு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, அம்பூர்பேட்டை பகுதியில் உள்ள எஸ்.ஆர்.கே.குப்புசாமி தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 80.) ஜவுளி வியாபாரி. இவரது மனைவி லட்சுமி (70). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். 

கடந்த 10 நாட்களுக்கு முன்பு சைக்கிளில் சென்றபோது அண்ணாமலை தவறி விழுந்துள்ளார். இதில் காயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை 6 மணிக்கு அண்ணாமலை இறந்துவிட்டார்.

மனைவியும் இறந்தார்

 அவரது மனைவி லட்சுமிஅம்மாள், கணவர் இறந்த வேதனையில் அவரது உடல் அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அப்போது திடீரென அண்ணாமலை உடல் மீது சாய்ந்து விழுந்தார். 

உடனடியாக அவரை உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து லட்சுமி அம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாகதெரிவித்தனர். கணவர் இறந்த ஒரு மணி நேரத்தில் மனைவியும் இறந்தது அந்தப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்