தூத்துக்குடி துறைமுகத்தில் டெண்டர் எடுத்து தருவதா கூறி ரூ.5 லட்சம் மோசடி

தூத்துக்குடி துறைமுகத்தில் டெண்டர் எடுத்து தருவதாக கூறி, ரூ.5 லட்சம் மோசடி நடந்துள்ளது.

Update: 2021-04-30 13:24 GMT
தூத்துக்குடி;
தூத்துக்குடி போல்பேட்டையை சேர்ந்தவர் கணேசன் ரமேஷ் (வயது 47). கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் வைத்து உள்ளார். இவரிடம், தெலுங்கானா மாநிலம் சைனிக்புரியை சேர்ந்த நாகேஸ்வர்ராவ் என்பவர் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் டெண்டர் எடுத்து தருவதாக கூறினாராம். இதனை நம்பிய கணேசன் ரமேஷ் டெண்டர் எடுப்பதற்காக ரூ.5 லட்சம் கொடுத்தாராம். ஆனால் நாகேஸ்வர்ராவ் டெண்டர் எடுத்துக் கொடுக்கவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போதும், அழைப்புகளை ஏற்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர் ரூ.5 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக கணேசன் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் நாகேஸ்வர்ராவ் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்