தூத்துக்குடி மாவட்டத்தில் 3பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில், 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை மிரட்டலில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கொலை வழக்கு
தூத்துக்குடி தெற்கு பொம்மையாபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் காளிச்சாமி (வயது 39). இவரை ஒரு கொலை வழக்கில் கோவில்பட்டி மேற்கு போலீசார் கைது செய்தனர். இதே போன்று ஏரல் புதுமனையை சேர்ந்த தங்கவேல் மகன் இசக்கிமுத்து (45) என்பவரை கொலை மிரட்டல் வழக்கில் ஏரல் போலீசார் கைது செய்தனர். குரும்பூர் அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் கிழக்கு தெருவை சேர்ந்த விஜயராஜ் மகன் சத்தியமுகேஷ் என்ற சதீஷ் (21) என்பவரை மணல் திருட்டு வழக்கில் குரும்பூர் போலீசார் கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காளிச்சாமி, இசக்கிமுத்து, சத்தியமுகேஷ் என்ற சதீஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர். ஒரே நாளில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.