தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 12 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறதா என்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 373 மதுபாட்டில்கள், 5 லிட்டர் கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.