கடலூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கை மீறிய 36 பேர் மீது வழக்கு
36 பேர் மீது வழக்கு
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று காலை 4 மணி வரை ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிந்த 36 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 18 இரு சக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ. 3 கார்கள் என 22 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.