பட்டுக்கோட்டை அருகே ஆம்னி பஸ் ஆற்றில் பாய்ந்தது பெண் உள்பட 5 பேர் காயம்

பட்டுக்கோட்டை அருகே சென்னை சென்ற ஆம்னி பஸ் காட்டாற்றுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2021-04-29 19:35 GMT
பட்டுக்கோட்டை:-

பட்டுக்கோட்டை அருகே சென்னை சென்ற ஆம்னி பஸ் காட்டாற்றுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். 

ஆம்னி பஸ்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து நேற்று காலை 10.30 மணி அளவில் ஒரு தனியார் ஆம்னி பஸ் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. ஒரு பெண் உள்பட 5 பேர் பயணம் செய்தனர். 
பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் கிராமத்தில் நசுவினி ஆற்றுப்பாலம் அருகில் அந்த பஸ் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆற்றுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண் உள்பட 5 பேர் சிறு காயங்களுடன் தப்பினர். ஆற்றில் தண்ணீர் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

போலீசார் விசாரணை

விபத்தில் காயம் அடைந்த 5 பேரும் உடனடியாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் முதலுதவி சிகிச்சைக்குப்பின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்