மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-04-29 18:36 GMT
முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் அருகே உள்ள கொண்டுலாவி ஆற்றுப் படுகையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின் பேரில் பேரையூர் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு டிராக்டரில் மணல் அள்ளியது தெரிந்தது. போலீசார் வருவதை கண்ட டிரைவர் புவனேஸ்வரன் தப்பி ஓடி விட்டார். டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்