ஒப்பந்த ெதாழிலாளா்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தாழிலாளா்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல் பாராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2021-04-29 18:32 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ெதாழிலாளா்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல் ேபாராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒப்பந்த தாழிலாளா்கள் மீது தாக்குதல்
மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் மோட்டார் சைக்கிளுடன் பணியாளர்களை தவிர்த்து யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. இந்தநிலையில் நேற்று மாலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர இளைஞர் பெருமன்ற செயலாளர் மனோன்ராஜ், மோட்டார் சைக்கிளுடன் அரசு மருத்துவமனையில் நுழைந்துள்ளார். அப்போது நுழைவுவாயிலில் பாதுகாப்புக்காக நின்றிருந்த ஒப்பந்த தொழிலாளர் அருண் மற்றும் அவருடன் பணியாற்றி வரும் பெண் தொழிலாளர்கள் மனோன்ராஜை தடுத்து நிறுத்தி உள்ளனர்.
 மேலும் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு உள்ளே வரும்படி ஒப்பந்த தொழிலாளர்கள் அவரிடம் வலியுறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மனோன்ராஜ், ஒப்பந்த பணியாளர் அருணை திட்டியுள்ளார். மேலும் தனது நண்பர்கள் சிலரை போன் மூலம் அழைத்துள்ளார். மனோன்ராஜ் தனது நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் வந்தவுடன் அங்கிருந்த ஒப்பந்த பணியாளர் அருண் மற்றும் பெண் தொழிலாளர்களை கல்லாலும், இரும்பு பைப்பாலும் தாக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். 
சாைல மறியல்
இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனை முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஒப்பந்த தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒப்பந்த தொழிலாளர்களை தாக்கியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதன்ேபாில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. 
பின்னா் ஒப்பந்த  தொழிலாளர்கள் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்கும் வகையில் போலீசார் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்