சிறுத்தை பாய்ந்ததில் மேற்கூரை சேதம்

மூதாட்டி வீட்டின் மீது சிறுத்தை பாய்ந்ததில் மேற்கூரை சேதம்

Update: 2021-04-29 18:18 GMT
வால்பாறை

 வால்பாறை நகர்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே அதை பிடிக்க 2 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. 

இந்த நிலையில் வால்பாறை துளசிங் நகரை சேர்ந்த அருக்காணி என்ற மூதாட்டி வீட்டின் சமையலறையில் உள்ள கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. 

உடனே அவர் அங்கு சென்று பார்த்தபோது ஒரு சிறுத்தை எட்டிப்பார்த்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் வந்தபோது அதற்குள் அந்த சிறுத்தை அங்கிருந்து ஓடி விட்டது. 

அந்த சிறுத்தை மேற்கூரையில் பாய்ந்தபோது அது உடைந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்