சிவகங்கை வர்த்தக நிறுவனங்களில் நகராட்சி ஆணையாளர் அதிரடி ஆய்வு

சிவகங்கையில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்று வர்த்தக நிறுவனங்களில் நகராட்சி ஆணையாளர் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-04-29 18:08 GMT
சிவகங்கை,

சிவகங்கையில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்று வர்த்தக நிறுவனங்களில் நகராட்சி ஆணையாளர் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா அதிகரிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.ஆரம்பத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இரட்டைஇலக்கத்திற்கு மாறி பின்னர் தற்போது மூன்று இலக்கத்திற்கு உயர்ந்துள்ளது.
இதனால் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து சிவகங்கை நகரில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நகராட்சி ஆணையாளர் அய்யப்பன் தலைமையில் சுகாதார அலுவலர், ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர்.

எச்சரிக்கை
அப்போது வர்த்தக நிறுவனங்களில் அதிக மக்களை அனுமதிக்க கூடாது. ஏ.சி.க்களை இயக்க கூடாது.கடைக்குள் வருவோருக்கு கிருமிநாசினி வழங்கி, கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். ஓட்டல்களில் அதிகளவில் மக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்க கூடாது. வர்த்தக நிறுவனங்களில் சமூக இடைவெளி இன்றி நின்றால் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்