205 பேருக்கு கொரோனா

மீண்டும் அதிகரித்த தொற்றால் 205 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 5 பெண்கள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2021-04-29 17:47 GMT
ராமநாதபுரம், 
மீண்டும் அதிகரித்த தொற்றால் 205 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 5 பெண்கள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.
பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 205 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 8 ஆயிரத்து 170 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை 7 ஆயிரத்து 120 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 907 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 143 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், கமுதி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 7 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பலியாகி விட்டதாக கூறப்படுகிறது. 
அச்சம்
மாவட்டத்தில் கொரொனா தொற்று எண்ணிக்கை தீவிரமாக உயர்ந்து 200-ஐ தாண்டிய நிலையில் பலி எண்ணிக்கையும் தினமும் உயர்ந்து கொண்டே வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்