வாலிபரை கடத்தி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்; 3 பேர் கைது
காரைக்குடியில் வாலிபரை கடத்தி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடி,
இது குறித்து ஆடியோவாக பதிவு செய்த ரூபன் தனது நண்பர்களிடம் அதனை போட்டு காட்டியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மணிகண்டனை மிரட்டி நாட்டார் கண்மாய் என்ற இடத்திற்கு கடத்தி சென்று உள்ளனர். அங்கு அவரை ஆடைகளை களைய செய்து ஆபாசமாக பேசி கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு, அதனை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டி அனுப்பியுள்ளனர். சம்பவம் நடந்த 6 நாட்களாகியும் மணிகண்டன் இதுகுறித்து யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.
ஆனால் மணிகண்டன் தாக்கப்பட்ட வீடியோ பதிவுகள் வைரலாக பரவி அவரது பெற்றோர் கவனத்திற்கும் சென்றது. இதுகுறித்து மணிகண்டனின் பெற்றோர் காரைக்குடி தெற்கு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்யா நகரை சேர்ந்த விஜி, அஜித், சரண்ராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். சுபாஷ், ரஞ்சித், ரூபன் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.