செல்போனில் விளையாடியதை தாயார் கண்டித்ததால் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

செல்போனில் விளையாடியதை தாயார் கண்டித்ததால் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

Update: 2021-04-29 17:14 GMT
திருப்பூர்
செல்போனில் விளையாடியதை தாயார் கண்டித்ததால் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மாணவன்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி குமாரி. இவர்களது மகன்கள் கோபாலகிருஷ்ணன், நவீன் குமார் (வயது 15). வெங்கடேசன் இறந்துவிட்டதால் குமாரி தனது மகன்களுடன் திருப்பூர் எஸ்.வி.காலனியில் குடியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வருகிறார்.
அந்த பகுதியில் உள்ள பள்ளியில் நவீன் குமார் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். அவன் வீட்டில் இருந்தபோது அடிக்கடி செல்போனில் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருடைய தாயார் சத்தம் போட்டு செல்போனை பிடுங்கி வைத்துள்ளார். 
தற்கொலை
அதனால் மனமுடைந்த நவீன்குமார் நேற்று மதியம் 12 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்