காங்கேயம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் முகவர்கள் 345 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
காங்கேயம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் முகவர்கள் 345 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.;
காங்கேயம்
காங்கேயம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் முகவர்கள் 345 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா பரிசோதனை
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிக்கு, வாக்குப் பதிவான எந்திரங்கள் திருப்பூர் எல்.ஆர்.ஜி.கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு என்னும் மையத்திற்கு செல்லும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள், தேர்தல் பணியாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மைய முகவர்கள், தேர்தல் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை முகாமில் 258 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.2-ம் நாளான நேற்று நடைபெற்ற முகாமில் 45 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பரிசோதனையின் முடிவுகள் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ளது. இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வாக்கு என்னும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களின் நோயின் தன்மைக்கேற்ப வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோ அல்லது மருத்துவமனைக்கோ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கொரோனா தொற்று இல்லை (நெகடிவ்) என்ற சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
தாராபுரம்
தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ண செல்லும் முகவர்களுக்கு தாராபுரம் சப்-கலெக்டா் பவன்குமாா் தலைமையில் சுகாதார துறையினா் சப்-கலெக்டா் கொரோனா பாிசோதனை மேற்கொண்டனா். இதில், அரசியல் பூத் ஏஜெண்டுகள் என 300 போ் கொரோனா பாிசோதனை செய்து கொண்டனா். அனைவருக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) பாிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படும்.