பார்வையற்ற தம்பதிக்கு பல்லடம் நகராட்சி நிர்வாகம் பாராட்டு

பார்வையற்ற தம்பதிக்கு பல்லடம் நகராட்சி நிர்வாகம் பாராட்டு

Update: 2021-04-29 16:59 GMT
பல்லடம்
பல்லடம் நகராட்சி நாரணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி(வயது 52), இவருடைய மனைவி சாந்தி( 47) இவர்கள் இருவருக்கும் கண்பார்வை இல்லை.
இந்த நிலையில், நேற்று நாராயணபுரத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள பல்லடம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து, தம்பதியினர் வசிக்கும் வீட்டிற்கு 2021- 2022 ஆண்டிற்கான, சொத்து வரி ரூ.420-ஐ வரிவசூல் மையத்தில் செலுத்தி அதற்கான ரசீதும் பெற்றுக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையாளர் கணேசன், வரிவசூல் மையத்திற்கு வந்து அந்த தம்பதியினரை பாராட்டினார். 

மேலும் செய்திகள்