திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கோவேக்சின் தடுப்பூசி இல்லை என சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து ஏமாற்றத்துடன் பொதுமக்கள் வீடு திரும்பி செல்கிறார்கள்.

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கோவேக்சின் தடுப்பூசி இல்லை என சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து ஏமாற்றத்துடன் பொதுமக்கள் வீடு திரும்பி செல்கிறார்கள்.

Update: 2021-04-29 16:53 GMT
திருப்பூர்
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கோவேக்சின் தடுப்பூசி இல்லை என சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து ஏமாற்றத்துடன் பொதுமக்கள் வீடு திரும்பி செல்கிறார்கள்.
தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் இருந்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் கொரோனா தடுப்பூசி முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே போடப்பட்டது. இதன்பின்னர் தான் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த தடுப்பூசி வந்தது. இருப்பினும் பொதுமக்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட ஆர்வம் இல்லாமல் இருந்து வந்தார்கள்.
ஆனால் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரமாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நாள் ஒன்றின் பாதிப்பு 500-ஐயும் கடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த அச்சத்தால் பலரும் தடுப்பூசி போட அரசு ஆஸ்பத்திரிகளில் குவிந்து வருகிறார்கள்.
ஏமாற்றம்
மாவட்டத்தில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி உள்பட 9 அரசு ஆஸ்பத்திரிகள், 13 ஆரம்ப சுகாதார நிலையம், 3 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பலரும் தடுப்பூசி போட முடியாமல் திணறி வருகிறார்கள்.
பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடும் உள்ளது. இதற்கிடையே திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கோவேக்சின் தடுப்பூசி இல்லை. இதன் காரணமாக பலரும் வந்து கோவேக்சின் தடுப்பூசி குறித்து கேட்டு வருகிறார்கள். இதனால் அங்கு கோவேக்சின் தடுப்பூசி இல்லை என சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவேக்சின் தடுப்பூசி போட வருகிற பொதுமக்கள் பலரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி செல்கிறார்கள். இதுபோல் கோவேக்சின் தடுப்பூசியும் இல்லை என்பதால் தடுப்பூசி போடும் பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டுவருகிறது.

மேலும் செய்திகள்