உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 100படுக்கை வசதிகளுடன், கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டு, அங்கு நேற்று முதல் நோயாளிகளுக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 100படுக்கை வசதிகளுடன், கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டு, அங்கு நேற்று முதல் நோயாளிகளுக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.;
உடுமலை
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 100படுக்கை வசதிகளுடன், கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டு, அங்கு நேற்று முதல் நோயாளிகளுக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கலைக்கல்லூரி
உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு தனியாக செயல்பட்டு வருகிறது. அத்துடன் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வந்ததைத்தொடர்ந்து உடுமலை எலையமுத்தூர் சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டன.
மின்விசிறிகள், மின்விளக்கு வசதிகள், ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொருவருக்கும் வெண்டிலேட்டர் வசதி செய்யும் வகையில் குழாய் இணைப்புகள், மருத்துவர் அறை மற்றும் செவிலியர்கள் அறைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ வசதிகள் அளிக்கும் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டது. அந்த வார்டு அறைகளில் மொத்தம் 100 படுக்கை வசதிகளும் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த ஆண்டின் பிற்பகுதியில், கொரோனா வைரஸ் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டு வந்ததால் இந்த அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இங்கிருந்த கட்டில்கள் மற்றும் மெத்தைகள் மட்டும் அகற்றப்பட்டன. அலுமினியம் பீடிங்கால் அமைக்கப்பட்ட அறைகள் அப்படியே இருந்தன.
கொரோனா
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதனால் உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் இடம் பற்றாக்குறை ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு, அரசு கலைக்கல்லூரியில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த இடத்தில், மீண்டும் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் உள்ள சிறப்பு வார்டில் 100 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் குறிப்பிட்ட நாட்களுக்கு சிகிச்சை பெற வேண்டியவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும்.
நோயாளிகள் அனுமதி
இதற்காக இங்கு சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவக்குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் 3 ஷிப்டுகளாக பணியாற்றுவார்கள். தற்போது ஒவ்வொரு சிப்டிலும் ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதைத்தொடர்ந்து அவர்கள் நேற்று பணிக்கு வந்தனர். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவக்குழுவினர் கூடுதலாக பணியமர்த்தப்படுவார்கள் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து உடுமலை அரசுமருத்துவமனையில் இருந்துமுதல் கட்டமாக நேற்று கொரோனா நோயாளிகள் 15 பேர் ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசுமருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பணிகளை உடுமலை நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் கவுரிசரவணன், எரிசனம்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் பார்த்திபன், அமராவதி நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் மனோஜ்குமார், வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் சோனை ஆகியோர் ஆய்வு செய்தனர். அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.