தோட்டங்களில் வேலிப்பயிராக இலவம்பஞ்சு மரங்களை வளர்த்து லாபம் ஈட்டலாம் என்று தோட்டக்கலை துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.

தோட்டங்களில் வேலிப்பயிராக இலவம்பஞ்சு மரங்களை வளர்த்து லாபம் ஈட்டலாம் என்று தோட்டக்கலை துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.

Update: 2021-04-29 16:16 GMT
போடிப்பட்டி
தோட்டங்களில் வேலிப்பயிராக இலவம்பஞ்சு மரங்களை வளர்த்து லாபம் ஈட்டலாம் என்று தோட்டக்கலை துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.
நல்ல விலை
தண்ணீர் மெத்தை, நுரைப்பஞ்சு மெத்தை, காற்று மெத்தை, ஸ்பிரிங்க் மெத்தை, மருத்துவ மெத்தை, நார் மெத்தை, பருத்தி பஞ்சு மெத்தை என்று பலவிதமான மெத்தைகள் சந்தைப்படுத்தப்படுகிறது. ஆனாலும் மெத்தையை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலே என்ற நிலைதான் உள்ளது. மெத்தைகள் உள்ளே அடைக்கப்படும் விஷயங்கள்தான் அந்த மெத்தைகளின் தரத்தை தீர்மானிக்கிறது. அந்த வகையில் காலம் காலமாக நம் பயன்பாட்டில் இருந்த இலவம்பஞ்சு மெத்தைகள் பயன்பாடு குறைந்துள்ளது. இருந்தாலும் ஒரு சில பகுதிகளில் இலவம்பஞ்சு மெத்தை மற்றும் தலையணைகளுக்கு இன்றளவும் மவுசு உள்ளது. இதனால் இலவம் பஞ்சுக்கு எப்போதும் நல்ல விலை கிடைக்கிறது. எனவே வேலிப்பயிராக இலவம்பஞ்சு வளர்த்து கூடுதல் வருவாய் பெறலாம் என்று தோட்டக்கலைத்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:- பராமரிப்பு குறைவான இலவம் மரங்களை பொள்ளாச்சி சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிக அளவில் தனிப் பயிராக சாகுபடி செய்து வந்தனர். காலப்போக்கில் இலவம்பஞ்சு மெத்தைகளிலிருந்து செயற்கைப்பஞ்சு மெத்தைகளுக்கு மக்கள் மாறத் தொடங்கினர். இதனால் விவசாயிகளும் இலவம் சாகுபடியைக் கைவிட்டு தென்னை சாகுபடிக்கு மாறி விட்டனர்.
மனித உழைப்பு அதிகம்
உடுமலை பகுதியில் குமரலிங்கம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான இலவம் மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவற்றை நம்பி சில குடும்பத்தினர் இலவம்பஞ்சு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இயற்கையை விட்டு படிப்படியாக விலகி செயற்கையை நோக்கிப்போன பலரும் மீண்டும் இயற்கையின் அருமையை உணர்ந்து மீண்டும் திரும்பத்தொடங்கியுள்ளனர்.
 அந்த வகையில் தற்போது இலவம்பஞ்சு மெத்தைகள் மற்றும் தலையணைகளுக்கும் மவுசு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாலும் உற்பத்தி குறைவாலும் வரும் காலங்களில் நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே வேலிப்பயிராக இலவம் மரங்களை சாகுபடி செய்தால் நடவு செய்த 4 ஆண்டுகளில் பலன் தரத் தொடங்கி விடும். வியாபாரிகள் நேரடியாக வந்து காய்களை வாங்கிச் செல்வார்கள். இதன் மூலம் நல்ல வருவாய் பெற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்