கண்டமனூரில் தீயணைப்புத்துறை அதிகாரி தற்கொலை
கண்டமனூரில் ஓய்வு பெற்ற தீயணைப்புத்துறை அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடமலைக்குண்டு:
கண்டமனூரை சேர்ந்தவர் கந்தவேல் (வயது 65). தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த சில வருடங்களாக ஆஸ்துமா மற்றும் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனம் உடைந்த கந்தவேல் கடந்த 25-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கந்தவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.