மணியக்காரம் பாளையத்தில் நடுரோட்டில் மிரட்டும் மின்கம்பம் மாற்றி அமைக்க கோரிக்கை
மணியக்காரம் பாளையத்தில் நடுரோட்டில் மிரட்டும் மின்கம்பம் மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.;
கணபதி,
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 41-வது வார்டு மணியகாரம்பாளையம் பகுதியில் கணபதி சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இதனால் இங்கு எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ளது. வாகன போக்குவரத்தும் உள்ளது.
இந்த நிலையில் இங்குள்ள நடுரோட்டில் மின்கம்பம் உள்ளது. இது போக்குவரத்துக்கு இடையூறாக மிரட்டும் நிலையில் உள்ளது. மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:- இது குறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு புதிய இரும்பு மின்கம்பத்தை அதற்கு மாற்றாக கொண்டு வந்து போட்டனர். ஆனால் அந்த மின்கம்பம் புதருக்குள் கிடக்கிறது. நடுரோட்டில் உள்ள மின்கம்பமும் இன்னும் மாற்றப்படாமல் உள்ளது. ஆகவே இதனை விரைவாக மாற்றி, விபத்து ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.