தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சல் முகாம் இன்று நடைபெறும் இடங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
காய்ச்சல் முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை கனநீர் ஆலை மெயின், நம்மாழ்வார் தெரு, ஆதிபராசக்தி நகர் (கோவில் அருகில்), வீரநாயக்கன்தட்டு (கோவில்அருகில்), பிரையண்ட் நகர் 7-வது தெரு (அங்கன்வாடி மையம்) ஆகிய பகுதிகளிலும், காலை 11 மணிமுதல் மதியம் 1 மணி வரை மகாலட்சுமி நகர் மெயின், நம்பிகை ரோச் சர்ச், தனசேகர் நகர் மெயின், இந்திரா நகர், ஆதிபராசக்தி கோவில், கே.வி.கே நகர் சர்ச், பகல் 2 மணி முதல் 4 மணி வரை சாமி நகர் மெயின், மட்டக்கடை மெயின், அன்னை இந்திரா நகர் மெயின், திரு.வி.க. நகர் (ரேஷன் கடை அருகில்), டூவிபுரம் 2-வது தெரு ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடக்கிறது.
கோவில்பட்டி
கோவில்பட்டி நகராட்சியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை புதுகிராமத்திலும், காலை 11 மணிமுதல் 1 மணி வரை நந்தவனம் பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை போஸ் நகர் பகுதியிலும்,
காயல்பட்டினம் நகராட்சியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை அம்பலமரைக்காயர் தெரு பகுதியிலும், காலை 11 மணிமுதல் 1 மணி வரை சுனாமி நகர் பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை வண்டிமலைச்சியம்மன் கோவில் தெரு பகுதியிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடக்கிறது.
புதுக்கோட்டை
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை புதுக்கோட்டை பால தண்டாயுத நகர், மேல மங்கலகுறிச்சி, கிளாக்குளம், துப்பாக்கி சுடுதளம், வல்லநாடு, ஆறுமுகநேரி விநாயகர் கோவில் தெரு, ஆத்தூர் தலைப்பண்ணை, நாசரேத் திருவள்ளூவர் காலனி, உடன்குடி புதுமனை, தண்டுபத்து, சாத்தான்குளம் கிருஷ்ணன் கோவில் தெரு, பூச்சிகாடு விலக்கு, இடைசெவல், புதுப்பட்டி, கலைஞானபுரம், ஓணமாக்குளம், அச்சன்குளம் ஆகிய பகுதிகளிலும், 11 மணிமுதல் 1 மணி வரை கோரம்பள்ளம், கீழ மங்கலகுறிச்சி, புதுக்குளம்ரூபவ் முருகன்புரம், ஆறுமுகநேரி ஏ.ஐ.டி.யு.சி காலனி, தெற்கு ஆத்தூர், நாசரேத் வெள்ளரிக்காயூரணி, உடன்குடி ரெங்கநாதபுரம், மானாடு, சாத்தான்குளம் செட்டியார் தெற்கு தெரு, பூச்சிகாடு, வில்லிசேரி, புங்கவரநத்தம், துலுக்கன்குளம், இளவேலங்கால், அயன்வடமலாபுரம் ஆகிய பகுதிகளிலும் நடக்கிறது.
பகல் 2 மணிமுதல் 4 மணி வரை குலையன்கரிசல், ஆலடியூர், புளியங்குளம், பாறைக்காடு, ஆறுமுகநேரி எஸ்.ஆர்.எஸ் கார்டன், குருக்காட்டூர், ஆழ்வார்திருநகரி, வேதக்கோட்டவிளை, கொட்டங்காடு, எள்ளுவிளை, கடாட்சபுரம், குமரன்விளை, மந்திதோப்பு, லக்கம்மாள்தேவி, வைப்பார், வீரபாண்டியபுரம், வேடப்பட்டி ஆகிய பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடக்கிறது.
எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.