கொரோனா தடுப்பு நெறிமுறைகள் மீறல்: சேலத்தில் 3 பஸ்களுக்கு அபராதம்

கொரோனா தடுப்பு நெறிமுறைகள் மீறியதாக சேலத்தில் 3 பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-04-28 23:28 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் தலைமையிலான குழுவினர், முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்கள் மற்றும் கொரோனா தடுப்பு வழிக்காட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்காத நிறுவனங்களை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் சேலம் தொங்கும் பூங்கா அருகே மாநகராட்சி பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு மற்றும் தனியார் பஸ்களை நிறுத்தி கண்காணித்தனர். இதில் 2 தனியார் பஸ்கள் மற்றும் ஒரு அரசு பஸ்சில் கொரோனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பஸ்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்