கருப்பூர் அருகே ரூ.5.50 லட்சம் தலைசவுரிமுடி மோசடி-பெங்களூரு வியாபாரிக்கு வலைவீச்சு

கருப்பூர் அருகே ரூ.5.50 லட்சம் மதிப்பில் தலைசவுரிமுடி மோசடியில் ஈடுபட்ட பெங்களூரு வியாபாரியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-04-28 23:13 GMT
கருப்பூர்:
திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 42). கரூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (48). இவர்கள் தலைசவுரிமுடி விற்பனை செய்பவர்கள். இவர்கள் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான தலை சவுரி முடியை காரில் சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே தண்ணீர் தொட்டி பகுதிக்கு பெங்களூரு வியாபாரி ஒருவரிடம் விற்பனை செய்ய கொண்டு வந்தனர்.
அப்போது சங்கரிடம் இருந்த முடியை பெங்களூரு வியாபாரி தனது காரில் ஏற்றுக்கொண்டு மறைவான பகுதிக்கு வாருங்கள் பணம் தருகிறேன் என்று  கூறியுள்ளார். இதனை நம்பி இவர்கள் இருவரும் அந்த காரை பின்தொடர்ந்து மெதுவாக சென்றுள்ளனர். ஆனால் பெங்களூரு வியாபாரி மின்னல் வேகத்தில் காரில் ஓமலூர் நோக்கி சென்று விட்டார். பின்னால் துரத்திச் சென்ற இருவரும் அந்த பெங்களூரு வியாபாரியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி கருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான தலை சவுரி முடியை நூதன முறையில் மோசடி செய்தவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்