கொடுமுடி, அந்தியூர் பகுதியில் 9 பெண்கள் உள்பட 21 பேருக்கு கொரோனா
கொடுமுடி, அந்தியூர் பகுதியில் 9 பெண்கள் உள்பட 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொடுமுடியில் வேகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. இச்சிப்பாளையத்தை சேர்ந்த 28 வயது பெண், தாமரைபாளையத்தைச் சேர்ந்த 69 வயது ஆண், கொடுமுடியைச் சேர்ந்த 20 வயது பெண், சாலைப்புதூரைச் சேர்ந்த 42 வயது பெண், சோளக்காளிபாளையத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர், வடக்கு மூர்த்தியாபாளையத்தை சேர்ந்த 24 வயது ஆண், கொடுமுடி வடக்கு தெருவை 22 வயது, 54 வயது, 20 வயதுடைய ஆண் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொடுமுடி வடக்கு தெரு முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
இதேபோல் அந்தியூர், தவுட்டுப்பாளையம், கெட்டிசமுத்திரம், புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் 7 ஆண்கள், 6 பெண்களுக்கு சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட புதுப்பாளையம் பகுதியில் 15, 22, 41, 63 வயதுடைய 4 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் தலைமையில் கிருமிநாசினிகள் அடித்து பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது.
மேலும் அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 29 வயது ஆண், 30 வயது ஆண், 32 வயது ஆண், 52 வயது ஆண், 65 வயதுடைய பெண், பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த 37 வயது ஆண், அந்தியூர் நந்தினி நகரை சேர்ந்த 55 வயது ஆண், 29 வயது பெண் ஆகியோர் சின்னத்தம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை எடுத்தனர். இதில் இவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.