பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
சங்கரன்கோவிலில் தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், தர்பூசணி வழங்கப்பட்டது.
சங்கரன்கோவில், ஏப்:
சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முருகன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சங்கரன், மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் வெற்றிவிஜயன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் அண்ணாவியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராஜா கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், தர்பூசணி, மோர், நீர் வழங்கினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.