போலீசாரை அரிவாளால் தாக்க முயன்ற 2 பேர் கைது

நெல்லை அருகே போலீசாரை அரிவாளால் தாக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-28 20:01 GMT
நெல்லை, ஏப்:
தாழையூத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் போலீசார், நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம், வெள்ளகோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வந்த ஒரு காரை நிறுத்தி அதில் இருந்த 7 பேரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
உடனே போலீசார் காரை சோதனை செய்தனர். இதனால் அவர்கள் போலீசாரை அவதூறாக பேசி, காரில் இருந்த அரிவாளை எடுத்து தாக்கி தப்பிச் செல்ல முயன்றனர். உடனே போலீசார் 2 பேரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்த மகாதேவன் (வயது 24), கீழப்பாட்டம் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (22) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்