மேலும் 263 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-04-28 19:24 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது. 
உயர்வு 
மாவட்டத்தில் மேலும் 263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 19,393 ஆக உயர்ந்துள்ளது.
 17,870 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,283 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
ஒருவர் பலி 
கொரோனா நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது.
 நேற்று விருதுநகர் பாண்டியன் நகர், பாத்திமா நகர், பர்மா காலனி, பாலாஜி நகர், என்.ஜி.ஓ. காலனி, லட்சுமிநகர், ரிசர்வ்லைன், சங்கரலிங்காபுரம், மத்திய சேனையில் உள்ள ஒரு கல்லூரியில் 7 பேர், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, நரிக்குடி, சாத்தூர், மேட்டமலை, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம், மல்லாங்கிணறு, வீரகுடி, ஆலங்குளம், சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

மேலும் செய்திகள்