குடிமங்கலம் அருகே கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை

குடிமங்கலம் அருகே கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-04-28 19:07 GMT
குடிமங்கலம்,

குடிமங்கலம் அருகே உள்ள மெட்ராத்தியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது23) இவரும் இதே பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவரது மகன் சதீஷ்குமாரும் (21) இவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந்தேதிஅன்று திருமணம் செய்து கொண்டனர்.சதீஷ்குமார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார் கிருஷ்ணவேணி தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் இரவு இருவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது சதீஷ்குமாருக்கு தெரியாமல் கிருஷ்ணவேணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சதீஷ்குமார் கண்விழித்து பார்த்தபோது கிருஷ்ணவேணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சதீஷ்குமார் உடனடியாக கிருஷ்ணவேணியின்  பெற்றோருக்கு போன் மூலம் சம்பவத்தை கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கிருஷ்ணவேணியின் தந்தை செல்வராஜ் குடிமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளார். குடிமங்கலம் போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து குடிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.சதீஷ்குமார் மீது வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்