வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்

வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-04-28 18:22 GMT
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். துணை தேர்தல் நடத்தும் அலுவலர் மகுடீஸ்வரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கை நாளான மே. 2-ந்தேதி அன்று கிருஷ்ணராயபுரம் கடவூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து வாக்கு எண்ணும் மையமான எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு வாக்கு எண்ணும் அலுவலர்கள் அழைத்து செல்லப்படுவார்கள். இதனால் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடத்தும் முறை குறித்து எந்திரம் மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்