லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-04-28 18:20 GMT
நச்சலூர்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நச்சலூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது நச்சலூர் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே அதே பகுதியை சேர்ந்த வாசுதேவன் (வயது 45), கண்ணன் (46), புரசம்பட்டி பகுதியை சேர்ந்த மோகன் (29) ஆகிய 3 பேரும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.51,850 பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 இதே போல்கரூர் தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரூர் அசோக் நகர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த தாஸ் (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்