கள்ளக்குறிச்சியில் சப் கலெக்டர் ஸ்ரீகாந்த் திடீர் ஆய்வு சமூக இடைவெளியை கடைபிடிக்காத 5 கடைகளுக்கு அபராதம்
கள்ளக்குறிச்சியில் சப் கலெக்டர் ஸ்ரீகாந்த் திடீர் ஆய்வு சமூக இடைவெளியை கடைபிடிக்காத 5 கடைகளுக்கு அபராதம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் பகுதிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம், துருகம்ரோடு, சுந்தர விநாயகர் கோவில்தெரு, காய்கறி மார்க்கெட், சேலம் மெயின்ரோடு ஆகிய பகுதி களில் உள்ள நகைக்கடை, ஜவுளிக்கடை, மளிகை, காய்கறி உள்ளிட்ட பல்வேறு கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டார்.
அப்போது கடையில் பணிபுரியும் ஊழியர்கள், பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்துள்ளார்களா?, சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? என ஆய்வுசெய்தார். அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காத 5 கடைகளுக்கு தலா ரூ.500, முகக்கவசம் அணியாத கடைஊழியர்கள் 10 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து அறிவுரை வழங்கினார். மேலும் முகக்கவசம் அணியாமல் வருபவர்களை கடைக்குள் அனுமதிக்க கூடாது எனவும், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களை எச்சரித்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி பணியாளர்கள் செந்தில்குமார், சதீஷ் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.