அரியவகை மண்ணுளி பாம்பு

கறம்பக்குடி அருகே அரியவகை மண்ணுளி பாம்பு பிடிபட்டது.

Update: 2021-04-28 17:15 GMT
கறம்பக்குடி, ஏப்.29-
கறம்பக்குடி அருகே உள்ள காட்டாத்தி குடியிருப்புகள் பகுதியில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்து அச்சத்தில் சத்தம் போட்டனர். உடன் அங்கு வந்த அப்பகுதி இளைஞர்கள் ஊர்ந்து செல்வது அரியவகை மண்ணுளி பாம்பு என்பதை கண்டறிந்தனர். இதனால் அந்த பாம்பை அடிக்காமல் குச்சியின் மூலம் பிடித்து சாக்குபையில் போட்டனர். பின்னர் இது குறித்து கறம்பக்குடி தாசில்தார் விசுவநாதன், காட்டாத்திகிராம நிர்வாக அதிகாரி சதீஸ்குமார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து புதுக்கோட்டை வனவர் ராமலிங்கம் அந்த பாம்பை பெற்று நார்த்தாமலை வனபகுதிக்கு பாதுகாப்பாக கொண்டு விட்டனர்.

மேலும் செய்திகள்