டாக்டர் உள்பட 252 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் பெண் டாக்டர் உள்பட மேலும் 252 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-04-28 17:07 GMT
தேனி: 

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 

நேற்று முன்தினம் ஒரே நாளில் 214 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டனர்.

 கொரோனா 2-வது அலையில் அதுதான் உச்சபட்ச பாதிப்பாக இருந்தது.

 இந்நிலையில் நேற்று அதையும் மிஞ்சும் வகையில் பெரியகுளத்தை சேர்ந்த 31 வயது பெண் டாக்டர் உள்பட 252 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

 இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 623 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்