அவினாசி அருகே சாராயம் வைத்திருந்தவர் கைது
அவினாசி அருகே சாராயம் வைத்திருந்தவர் கைது
அவினாசி
அவினாசி போலீசார் தெக்கலூர் ரோட்டில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தெக்கலூரிலிருந்து வளையபாளையம் செல்லும் ரோட்டில் மாகாளியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் அவினாசியை அடுத்துகந்தம்பாளையத்தை சேர்ந்த கருப்புசாமி (வயது47) என்பதும் ஒரு கேனில் 5 லிட்டர் சாராயம் வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்வது தெரியவந்தது. எனவே போலீசார் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 5 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.