விழுப்புரம் மாவட்டத்தில் தபால் நிலையங்களின் வேலை நேரம் குறைப்பு பாதுகாப்பு வழிமுறைகளுடன் இயங்கியது

விழுப்புரம் மாவட்டத்தில் தபால் நிலையங்களின் வேலை நேரம் குறைக்கப்பட்டது.

Update: 2021-04-28 16:30 GMT
விழுப்புரம், 

கொரோனா வைரஸ் நோய் தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ளதையடுத்து அதிலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தபால் நிலையங்களின் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

 அதாவது அனைத்து தபால் நிலையங்களிலும் உள்ள வாடிக்கையாளர் சேவை மையங்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் விரைவு தபால்கள், பதிவு தபால்கள், பார்சல் சேவைகள் எந்தவித காலதாமதமும் இன்றி குறித்த நேரத்தில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் பாஸ்போர்ட் பெற ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அஞ்சல்துறை அறிவித்துள்ளது. 

இதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திண்டிவனம் தலைமை தபால் நிலையங்கள் மற்றும் 40 துணை அஞ்சலகங்கள், 200 கிளை அஞ்சலகங்கள் அனைத்திலும் நேற்று முன்தினம் முதல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் காலை 10 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கி வருகின்றன.

மேலும் செய்திகள்