மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதல்; வாலிபர் சாவு

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி வாலிபர் ஒருவா் உயிாிழந்தாா்.;

Update: 2021-04-28 16:23 GMT
திண்டிவனம், 

பெரம்பலூர் மாவட்டம் இன்மானடி கிராமத்தை சேர்ந்தவர் இன்னாசி மகன் ஜூலியன்ராஜ் (வயது  22).  இவர் நேற்று செஞ்சியில் இருந்து திண்டிவனம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். 

அப்போது, கொணக்கம்பட்டு பாலம் அருகே வந்த போது, எதிரே திண்டிவனத்தில் இருந்து செஞ்சி நோக்கி சென்ற மினிலாரி அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜூலியன்ராஜ் இறந்தார். 

இதுகுறித்து ரோஷணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்