பவானி, புஞ்சைபுளியம்பட்டியில் 5 கடைகளுக்கு சீல்
பவானி, புஞ்சைபுளியம்பட்டியில் 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
ஈரோடு
பவானி, புஞ்சைபுளியம்பட்டியில் 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
பவானி
கொரோனா 2-வது அலை சுனாமியாக தாக்கி வருவதால் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இதேபோல் கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா? என்று கலெக்டர் கதிரவன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்தநிலையில் பவானி நகர பகுதிகளில் நேற்று கலெக்டர் கதிரவன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முககவசம் அணியாமல் வியாபாரம் செய்த பெயிண்ட் கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாத மருந்துகடை, ஒரு டீக்கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அபராதமும் விதிக்கப்பட்டது. பவானி நகரில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் 12 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.
புஞ்சைபுளியம்பட்டி
இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி ஆணையாளர் பழனிச்சாமி, சுகாதார ஆய்வாளர் ஜெகதீசன் மற்றும் நகராட்சி பணியாளார்கள் நேற்று காலை நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றனவா? என்று சோதனையில் ஈடுபட்டார்கள். இதில் பவானிசாகர் ரோட்டில் கொேரானா விதிகளை கடைபிடிக்காத ஓட்டல், தையல் கடை மற்றும் ஒரு சலூன் கடை என 3 கடைகளையும் பூட்டி சீல்வைத்தார்கள். மேலும் முககவசம் அணியாத 7 பேருக்கு ரூ.1400 அபராதம் விதிக்கப்பட்டது.