பஸ்- மோட்டார்சைக்கிள் மோதல்; இளம்பெண் பலி

பாவூர்சத்திரம் அருகே பஸ், மோட்டார்சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் இளம்பெண் பலியானார்.

Update: 2021-04-27 23:21 GMT
பாவூர்சத்திரம், 

பாவூர்சத்திரம் அருகே பஸ், மோட்டார்சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இளம்பெண்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூர் மேல தெருவை சேர்ந்தவர் அயோத்திராமன். இவரது மகன் செல்வராஜ் (வயது 30) மற்றும் மகள் பொன்ஷீலா (24). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, தென்காசியில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு செல்வராஜ், தங்கை பொன்ஷீலாவை அழைத்துக்கொண்டு, மோட்டார்சைக்கிளில் ஆலங்குளத்தில் உள்ள ஜவுளிக்கடைக்கு சென்றார். அங்கு துணி எடுத்துவிட்டு 2 பேரும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
நெல்லை- தென்காசி நெடுஞ்சாலையில் சாலைப்புதூர் பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது, எதிரே வந்த அரசு பஸ்சும், இவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் மோதியது. இதில் செல்வராஜ் தூக்கி எறியப்பட்டு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

பரிதாப சாவு

பொன் ஷீலா நிலை தடுமாறி விழுந்ததில் பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொன்ஷீலா உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக விபத்து நடந்த பகுதியில் அந்த பகுதி மக்கள் பலியான பெண் உடலை ஆம்புலன்சில் ஏற்றிச் செல்லக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்