குளியலைறயில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

விக்கிரமசிங்கபுரத்தில் குளியலைறயில் தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.

Update: 2021-04-27 22:43 GMT
விக்கிரமசிங்கபுரம், ஏப்:
விக்கிரமசிங்கபுரம் அருணாசலபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52) இவர் அங்குள்ள கோழிகடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை குளியலறைக்கு முருகன் சென்றுள்ளார். அப்போது திடீரென தவறி விழுந்தார். இதில் காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முருகன் இறந்தார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்