வள்ளியூர், ராதாபுரம் பகுதியில் மேலும் 115 பேருக்கு கொரோனா
வள்ளியூர், ராதாபுரம் பகுதியில் மேலும் 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வள்ளியூர், ஏப்:
வள்ளியூர், ராதாபுரம் வட்டார பகுதிகளில் தற்போது 2-ம் கட்ட கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று வள்ளியூர், ராதாபுரம் வட்டாரத்தில் 115 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் என 19 பேரும், பணகுடியில் 19 பேரும், வள்ளியூரில் 18 பேரும், திசையன்விளையில் 10 பேரும், வடக்கன்குளத்தில் 7 பேரும், காவல்கிணறு, தெற்குகருங்குளம், தெற்குகள்ளிகுளம், ராதாபுரத்தில் தலா 3 பேரும், இடிந்தகரையில் 2 பேரும் அடங்குவர்.
நாங்குநேரி வட்டாரத்தில் சிறுமளஞ்சி கிராமத்தில் நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.