மங்களூரு அருகே ஆள்கடத்தல் வழக்கில் 7 பேர் கைது

மங்களூரு அருகே ஆள்கடத்தல் வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-04-27 21:24 GMT
மங்களூரு: மங்களூரு அருகே ஆள்கடத்தல் வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். 

7 பேர் கைது

மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் நேற்று மாலை தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

மங்களூரு கே.சி.நகரை சேர்ந்த அகமது அஸ்ரப் மற்றும் இக்பால் ஆகியோர் கடந்த 22-ந்தேதி மர்மநபர்களால் கடத்தப்பட்டனர். இதுதொடர்பாக அகமது அஸ்ரப்பின் மனைவி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மர்மநபர்களிடம் இருந்து 2 பேரும் மீட்கப்பட்டனர். 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் அதேப்பகுதியை சேர்ந்த அகமது இக்பால் யாகூப், உமர், சம்சீர், சையத் முகமது, நவ்சத், ஷேக் முகமது, ரியாஸ் என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 120 கிராம் தங்க நகைகள், 10 செல்போன்கள், 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

பணம் பறிக்க திட்டம்

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், அகமது அஸ்ரப் மற்றும் இக்பால் ஆகியோரிடம் அதிகளவு பணம் இருப்பதை அறிந்து கொண்ட மர்மநபர்கள், 2 பேரையும் கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர். கைதான 7 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்