புதுச்சத்திரம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
புதுச்சத்திரம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
நாமக்கல்,
புதுச்சத்திரம் அருகே உள்ள தத்தாதிரிபுரத்தை சேர்ந்தவர் செட்டி (வயது 51). வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த செட்டி விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி செட்டி இறந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் செட்டி குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.