கடலூர் கலெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார்

போலி முகநூல் கணக்கு

Update: 2021-04-27 20:57 GMT
கடலூர், 
கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியின் பெயரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முகநூலில் (பேஸ்புக்) பணம் கேட்டு குறுஞ்செய்தி ஒன்று வெளியானது. இது சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், நேற்று கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியின் பெயரில் https://www.facebook.com/tbhanu.schohuannஎன்ற முகவரியை பயன்படுத்தி யாரோ, போலி முகநூல் கணக்கு தொடங்கியுள்ளனர். மேலும் கலெக்டரின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில், அந்த முகநூல் பக்கத்தில் தவறான செய்திகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால் கலெக்டரின் பெயரில் தவறான செய்திகளை பதிவிடும் நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்