அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தந்தை உடல் அடக்கம்

திருமங்கலம் அருகே அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தந்தை உடல் அடக்கம் செய்யப்பட்டது

Update: 2021-04-27 19:55 GMT
திருமங்கலம்
திருமங்கலம் அருகே அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தந்தை உடல் அடக்கம் செய்யப்பட்டது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
துணை முதல்-அமைச்சர்
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை அண்ணாநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவரது தந்தை போஸ் தேவர்(வயது 73). இவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம்  மாரடைப்பால் இறந்தார். அவரது உடல், திருமங்கலம் அருகே குன்னத்தூர் அம்மா சேரிடபுள் வளாகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயகுமாரிடம் தொலைபேசி மூலம் ஆறுதல் கூறினார்.
இந்தநிலையில் போஸ் தேவர் உடலுக்கு அ.தி.மு.க. சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ், டாக்டர் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி, பாஸ்கரன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி
மேலும் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ். சரவணன், பெரியபுள்ளான், மாணிக்கம், டாக்டர் சரவணன், சதன் பிரபாகரன், மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் விசாகன், மாவட்ட காவல்துறை துணை தலைவர் சுதாகரன், போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், வேலம்மாள் மருத்துவமனை தலைவர் முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் அன்வர்ராஜா, வைகை செல்வன், பா.ஜ.க.வை சேர்ந்த சீனிவாசன், சசிராமன், ம.தி.மு.க.வை சேர்ந்த பூமிநாதன், தி.மு.க.வை சேர்ந்த மன்னன் கோபிநாதன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 
இதில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட ெஜயலலிதா பேரவை செயலாளர் தமிழழகன், மீனவர் அணி செயலாளர் சவுடார்பட்டி சரவணன், திருமங்கலம் ஒன்றிய துணைச் செயலாளர் சுகுமார், அகில இந்திய மருதுபாண்டியர் மாநில பேரவை தலைவர் கண்ணன், திருமங்கலம் விஜயன், அவைத்தலைவர் அய்யப்பன், வர்த்தக அணி சதீஷ் சண்முகம், இணைச்செயலாளர் சாமிநாதன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் போஸ் தேவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வைகோ ஆறுதல்
மேலும் அமைச்சர்கள் தங்கமணி, சம்பத், சேவூர்ராமசந்திரன், பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்டு முத்தரசன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை, கூடுதல் காவல்துறை இயக்குனர் டேவிட் ஆசீர்வாதம் ஆகியோர் தொலைபேசி மூலம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஆறுதல் கூறினர்.

மேலும் செய்திகள்