மாநில கைப்பந்து போட்டி

சிவகாசி பி.எஸ்.ஆர்.என்ஜினீயரிங் கல்லூரியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.;

Update: 2021-04-27 19:54 GMT
சிவகாசி, 
சிவகாசி பி.எஸ்.ஆர்.என்ஜினீயரிங் கல்லூரியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை கல்லூரியின் தாளாளர் சோலைசாமி தலைமைதாங்கி தொடங்கி வைத்தார். கல்லூரியின் இயக்குனர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலைவகித்தார். இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 12 அணிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை பி.எஸ்.ஆர்.கல்லூரியின் பழைய  மாணவர்கள்  அணியும், இரண்டாம் பரிசை மதுரை அணியும், மூன்றாம் பரிசை கன்னியாகுமரி அணியும் பெற்றனர்.  பி.எஸ்.ஆர்.  கல்லூரியின் பழைய  மாணவர் அணியை சேர்ந்த அகஸ்டின் சிறந்த கோல் கீப்பருக்கான விருதும், அரவிந்த் சிறந்த வீரருக்கான விருதையும் பெற்றனர். இதில் கல்லூரியின் முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ரமணி, அன்பரசி, சுந்தரமூர்த்தி, பிரகாஷ், சந்திரகுமார், அசோக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்