பள்ளி மாணவியை கடத்தியவர் போக்சோவில் கைது

பள்ளி மாணவியை கடத்தியவர் போக்சோவில் கைது

Update: 2021-04-27 19:51 GMT
பள்ளி மாணவியை கடத்தியவர் போக்சோவில் கைது
கணபதி

கோவை கணபதி பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவருக்கும், அவருடைய உறவினரான சேலத்தை சேர்ந்த சங்கர் (வயது21) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 

இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இதை அறிந்த மாணவியின் தாய், மகளை கண்டித்தார். இது பற்றி அந்த மாணவி, சங்கரிடம் கூறியுள்ளார். 

உடனே சங்கர், அந்த மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். 

அதை நம்பிய மாணவியை சங்கர் கோவையில் இருந்து சேலத்துக்கு கடத்தி சென்றுள்ளார்.  தனது மகளை, சங்கர் கடத்தி சென்று விட்டதாக அந்த மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி, மாணவியை போலீசார் மீட்டனர். மாணவியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்ற சங்கரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்