விஷம்குடித்த என்ஜினீயர் சிகிச்சை பலனின்றி சாவு

குளித்தலையில் விஷம் குடித்த என்ஜினீயர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2021-04-27 19:34 GMT
குளித்தலை
குளித்தலை சவுண்டீஸ்வரி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த செந்தில்நாதன் மகன் முகிலன் (வயது 24). என்ஜினீயரிங் முடித்துள்ள இவர் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர். சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த முகிலன் வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து அவரது தாய் பாக்கியம் கேட்டதற்கு, தான் மதுவில் எலி மருந்தை (விஷம்) கலந்து குடித்து விட்டதாக கூறியுள்ளார்.இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாக்கியம், உறவினர்கள் உதவியோடு முகிலனை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட முகிலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்